அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா எதிர்வரும் 27ஆம் திகதி, நிச்சயமாக விடுதலை செய்யப்படுவார் என கர்நாடகா சிறைத்துறை தெரிவித்துள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் சிறையிலுள்ள சசிகலா எதிர்வரும் 27 ஆம் திகதி விடுதலையாக இருந்த நிலையில், உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார்.
இதனால் பெங்களூரிலுள்ள விக்டோரியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலாவை அனுமதித்து, வைத்தியர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.
இதனால் தற்போது சசிகலாவின் உடல்நிலை, நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளதென பெங்களூர் விக்டோரியா அரச வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆகவே அவரை, வைத்தியசாலையிலுள்ள சாதாரண விடுதிக்கு மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.