அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனம் ஒரே நேரத்தில் 143 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள உலகின் முதல் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ( SpaceX) போல்கன் ( Falcon) விண்கலம் மூலமாக, 143 செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்தி, வெற்றிகரமாக நிலை நிறுத்தியுள்ளது.
இந்த 143 செயற்கைக் கோள்களில் அரசாங்கத்தின் செயற்கைக் கோள்களும் உள்ளடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகளவிலான செயற்கைக் கோள்களை ஒரே நேரத்தில் நிறுவி ஸ்பேஸ் எக்ஸ் புதிய சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்னர் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களை நிறுவியதே சாதனையாக இருந்தது.