ஒன்ராரியோவில் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராரியொ முதல்வர் டக்போர்ட் இந்த அறிவிப்பினை இன்று வெளியிட்டள்ளார்.
கடந்த 12ஆம் திகதி ஒன்ராரியோவில் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிரந்த நிலையில் அது அடுத்து வரும் 28 நாட்களுக்கு அமுலில் இருந்தது.
அந்தவகையில் அந்த உத்தரவானது எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி வரையில் அந்த உத்தரவு அமுலில் உள்ளது.
இந்நிலையில் தற்போதைய அறிவிப்பின் பிரகாரம் பெப்ரவரி 9ஆம் திகதியிலிருந்து 14 நாட்களுக்கு இதே உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போது பின்பற்று வரும் நடைமுறைகளும் அவ்வாறே பின்பற்றப்படவுள்ளது.