சிறிலங்காவின் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்தும் பிரித்தானியா தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான ஐ.நா. அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் (SHARA HULTON) தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்காதொடர்பான அணுகுமுறை குறித்து தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்