இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பு மருந்து நாளை மறுநாளே சிறிலங்காவுக்குக் கிடைக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியா கொடையாக வழங்கும் 6 இலட்சம் கொவிஷீல்ட் தடுப்பு மருந்து, நாளை சிறிலங்காவை வந்தடையும் என்று முன்னதாக சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருந்தார்.
அத்துடன், மறுநாள் வியாழக்கிழமை தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசிகளை போடுவதற்கும் திட்டமிடப்பட்டிருந்த்து.
எனினும், தற்போது, 5 இலட்சம் தடுப்பூசிகளை நாளை மறுநாள் இந்தியாவி அனுப்பி வைக்கவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.