அமெரிக்காவில் முதலாவது பெண் நிதிச் செயலாளராக ஜனட் யேலன் ( Janet Yellen) நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்க முன்னதாகவே, நிதிச் செயலாளர் பதவிக்கு பொருளாதார வல்லுநரான 74 வயதுடைய ஜனட் யேலன் (Janet Yellen) அம்மையாரை தெரிவு செய்திருந்தார்.
இவரது நியமனத்தை அங்கீகரிப்பது தொடர்பாக செனட் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், ஆதரவாக 84 உறுப்பினர்களும், எதிராக 15 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
அமெரிக்க வரலாற்றிலேயே நிதி செயலாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ள ஜனட் யேலன் ( Janet Yellen) விரைவில் பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.