இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னான்டோவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவில் அடுத்தடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருகின்றனர்.
ஏற்கனவே, அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, பவித்ரா வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர்கள் தயாசிறி ஜயசேகர, பியால் நிசாந்த, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.