முல்லைத்தீவு, குருந்தூர்மலைப் பகுதியில் தொல்லியல் திணைக்களம் நாளை அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குருந்தூர்மலைப் பகுதியில் புராதன விகாரை இருந்திருக்கலாம் என்ற அடிப்படையிலேயே இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் மக்கள் பாரம்பரம்பரியமாக வழிபாடு நடத்தி வரும், குருந்தூர் மலையில், இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் கடந்த 18ஆம் திகதி, அகழ்வுப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தன.
இதன்போது, தமிழ் மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்த ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தின் சூலம் பிடுங்கியெறியப்பட்டது.
தொல்பொருள் திணைக்களத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், நாளை தொடங்கவுள்ள அகழ்வுப் பணிகளில், தமிழ் அதிகாரி ஒருவரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.