ஜனநாயகம், மனித உரிமைகள், அமைதியாக ஒன்றுகூடுதல் தொடர்பாக சிறிலங்காவுக்கு யாரும் பாடம் நடத்தக் கூடாது என்று வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ள அவர்,
“அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இப்போது தனது வீட்டை ஒழுங்குபடுத்தி, கடந்த ஆண்டுகளில் சிதைந்து போன ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்.
நாங்கள் வன்முறை நாடு அல்ல. நாட்டில் வன்முறைகள் இடம்பெறவில்லை.
சில தனித்தனியான சம்பவங்களைத் தவிர ஏனைய நாடுகளைப் போன்று வன்முறைகள் நிகழவில்லை.
நாங்கள் இன, மத நல்லிணக்கத்துடன் இருக்கிறோம், அதனை ஏனைய நாடுகளுக்கு போதிக்கத் தயாராக உள்ளோம்.
பைடன் நிர்வாகத்திடம் இருந்து எவ்வாறு பயனடைவது என்பதை அறிந்து கொள்வதற்காக அமெரிக்காவை சிறிலங்கா உன்னிப்பாக அவதானித்து வருகிறது” என்றும் கூறியுள்ளார்.