கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் வேலைகளை இழந்துள்ளதாக கனடியத் தேசிய வேலைவாய்ப்பு அறிக்கை தெரிவிக்கின்றது.
டிசம்பரில் வேலைவாய்ப்புக்களும் 28ஆயிரத்து 800ஆக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை சம்பளப்பட்டியல் தரவுகளிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உற்பத்தி போன்ற தொழிற்துறைகள் மிகப்பெரும் பின்னடைவைக் கண்டுள்ளன அவை 17, ஆயிரத் துக்கும் மேற்பட்ட வேலைக ளை இழந்துள்ளன
வணிக சேவைகள் மற்றும் தொழில்நுட்ப சேவைகளில் முறையே 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்பட்டுள்ளன.
அதேவேளை கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகள் டிசம்பரில் அதிக வேலைவாய்ப்பைக் கண்டுள்ளன.