புதுடெல்லி செங்கோட்டையை விவசாயிகள் இரவிரவாக உழவு இயந்திரங்களுடன் முற்றுகையிட்டுள்ளதால் பதற்றநிலை அதிகரித்துள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக 65 நாட்களாக போராடி வரும் விவசாயிகள் இன்று உழவு இயந்திரங்களுடன் பேரணி நடத்தினர்.
இந்தப் பேரணியில் காவல்துறையினர் திடீரென நடத்திய கண்ணீர்புகை குண்டு தாக்குதலை அடுத்து வன்முறை வெடித்தது.
அதேவேளை, போராட்டக் காரர்களும் சிலர் வன்முறையில் இறங்கி, டில்லி செங்கோட்டையில், தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு,அதன் மீது விவசாய சங்க கொடியை ஏற்றினர்.
பின்னர் காவல்துறையினர் தடியடி நடத்தி, விவசாயிகளை விரட்டினர். இந்த வன்முறை சம்பவத்தில் விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.
வன்முறைகளை அடுத்து, டில்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும், விவசாயிகள் கலைந்து செல்லாமல், உழவு இயந்திரங்களுடன், நேரத்திலும் செங்கோட்டையை சுற்றி முற்றுகையிட்ட வண்ணம் உள்ளனர்.
அதேவேளை, புதுடில்லி முழுவதும் நேற்று பிற்பகல் தொடக்கம், இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.