வட மாகாணத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை தற்போது மேற்கொண்டு வருவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி வழங்கல் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் வட மாகாணத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்யுறுறுதியானதாகவும் அவர் குறிப்பிட்டார்.