யாழ்ப்பாண நகரில், நெடுந்தூர பேருந்து நிலையம் பொது மக்களின் பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகாரசபையினால், நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் திறப்பு விழாவுக்கு, யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் தலைமை தாங்கியிருந்தார்.
இந்த நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸ் நெடுந்தூர பேருந்து நிலையத்தை திறந்து வைத்துள்ளார்.
122 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், இந்த பேருந்து நிலையத்தை அமைக்க, முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டிருந்தது.
புதிய நெடுதூர பேருந்து நிலையத்தில் சிங்கள மொழிக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அதிருப்தி வெளியிட்டிருந்த யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் ஈசன் ‘தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படாவிட்டால் தாபேருந்து நிலைய திறப்பு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை’ என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.