நான்கு ஆண்டுகால சிறைவாசத்தை முடித்துள்ள சசிகலா நாளை காலை 10.30 மணிக்கு விடுதலை செய்யப்படவுள்ளார்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள போதும், மருத்துவமனையில் உள்ள சசிகலாவிடம் நாளை காலை 9 மணியளவில் சிறை அதிகாரிகள் கையெழுத்து பெறவுள்ளனர்.
சிறைத்துறையின் நடைமுறைகள் முடிந்ததும் நாளை காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலை செய்ய்யப்படுவார்.
நாளை விடுதலையாகவுள்ள சசிகலாவுக்கு Z பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.