மேலதிக பயணக்கட்டுப்பாடுகளை விரைவில் விதிப்பதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒன்ராரியோ உள்ளிட்ட மாகாணங்களில் அதிகரித்து வருகின்றமையை மையப்படத்தியும் நேரடியாக விமான நிலையங்களில் பெற்ற புள்ளி விபரங்களின் அடிப்படையிலும் பிரதமர் இந்த அறிவிப்பினை செய்துள்ளார்.
கனடாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வதும், அதேபோன்று நாட்டிற்குள் வருவதையும் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
அதுமட்டுமன்றி மாகாணங்களுக்கு இடையிலான அநாவசியமான பயணங்களை தடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விதிகளை கடுமையான முறையில் அமுலாக்குவதற்கு திட்டமிட்டு எதிர்பார்த்துள்ள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.