விவசாயிகள் பேரணி வன்முறையாக வெடித்த நிலையில் அது தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக டெல்லியில் விவசாயிகள் உழவு இயந்திர பேரணியை முன்னெடுத்தனர்.
இதற்காக குறிப்பிட்ட வழித்தடங்களில் செல்வதற்கு காவல்துறையினர் நிபந்தனையுடன் அனுமதி அளித்திருந்தனா்.
இந்நிலையில் பேரணிக்கு வந்தவா்கள் அவா்களுக்கு அனுமதி அளித்திருந்த வழித்தடங்களை மீறி செங்கோட்டை, ஐடிஓ, நாங்லோய் உள்ளிட்ட பல இடங்களில் முற்றுகையிட்டதால் பேரணியில் ஈடுபட்டவா்களுக்கும், காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பின் அது வன்முறையாக மாறியது.
இதற்கிடையில் திக்ரி எல்லையில் விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்த திரண்டுள்ளதால் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது