விவசாயிகள் போராட்டத்தில் சில சமூக விரோதிகள் ஊடுருவியதாக, உழவு இயந்திர பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்த விவசாய அமைப்புகளில் ஒன்றான சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “இன்றைய பேரணியில், எதிர்பார்க்காத அளவுக்கு பங்கேற்ற விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
பேரணியில் எதிர்பார்க்காத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள் நடந்ததற்கு கண்டனத்தையும், வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறோம்.
இது போன்ற செயல்களில் இருந்து நாங்கள் எங்களை விடுவித்து கொள்கிறோம்.” என்று கூறப்பட்டுள்ளது.