ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் காட்டமான அறிக்கையைத் தொடர்ந்து, சிறிலங்காவுக்கு எதிரான நீதிக்கான சர்வதேச உந்துதலுக்கு பிரித்தானியா தலைமை தாங்க வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
“சிறிலங்காவில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைமையை நிவர்த்தி செய்ய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அடுத்த மாதம் மனித உரிமைகள் பேரவை கூடும் போது ஒரு வலுவான தீர்மானத்தை முன்வைக்க உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அதன் உறுதிப்பாட்டை பிரித்தானியா பின்பற்ற வேண்டும்.
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வழங்குவதில் சிறிலங்காவின் மோசமான நிலையையும், நாட்டில் மனித உரிமைகள் மீது ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளையும் வெளிக்காட்டியுள்ளது.
சிறிலங்கா குறித்து இன்னும் கடுமையான மேற்பார்வை செய்ய வேண்டும் என்றும், அறிக்கையின் முக்கிய பரிந்துரைகளை அமுல்படுத்துமாறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்துவதாகவும், சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.





