யூ-டியூப், முகநூல் , கூகுள் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள், காணொளிகள், புகைப்படங்களை நெறிமுறைப்படுத்தவும், தணிக்கை செய்யவும் நடவடிக்கை எடுக்கக் கோரும் மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தரப்பில் முன்னிலையான சட்டவாளர், யூ-டியூப், முகநூர், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுக்கான தணிக்கையை தாங்களே மேற்கொள்ள வேண்டும் எனவும் புகார்கள் ஏதேனும் வந்தால் தான் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசு சட்டவாளரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது குறித்து யூ-டியூப், முகநூல், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அழைப்பாணை அனுப்பி அவர்கள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.