கவர்ணர் ஜெனரலின் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் சட்ட ரீதியாக தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வினைப் பெறுவதற்கான வழிமுறைகள் பல இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெறுப்பு பேச்சுக்கு எதிரானோர், தொழிலாளர்கள் உரிமைகளை பாதுகாப்போர், இன ரீதியான செயற்பாடுகளை தடுக்கும் குழுவினர் ஆகிய தரப்பினர் இந்த சுட்டிக்காட்டலைச் செய்துள்ளனர்.
கவர்ணர் ஜெனரலின் அலுவலகத்தில் காணப்பட்ட இறுக்கமான நிலைமைகள் தொடர்பில் ஆய்வறிக்கை வெளியான நிலையில் கவர்ணர் ஜெனரல் பதவியலிருந்து விலகியிருந்தார்.
எனினும், அவருடைய பதவி விலகலானது, அனைத்துக்கும் தீர்வளித்து விடாது என்பது உரிமைகளுக்காக போராடும் தரப்பினரின் கருத்தாக உள்ளது.
இந்நிலையிலேயே அங்கு பணியாற்றிவரும் ஊழியர்களை சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அத்தரப்புக்கள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் வெளியாகியுள்ள ஆய்வறிக்கை வலுத்த சான்றுகளைக் கொண்டிருப்பதால் தயக்கம் காட்ட வேண்டியதில்லை என்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது