ஈரான் விதிகளுக்கு ஒப்புக் கொண்டால் அமெரிக்கா அணுஆயுத ஒப்பந்தத்தில் இணைய தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் ப்ளிங்கின் (Blinkin) தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகம் ஆட்சியில் இருந்த போது, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.இந்த உறவினை புதுப்பிப்பதற்கு ஜோ பைடன் நிர்வாகம் முயற்சி செய்து வருகின்றது.
இந்தநிலையில், அனைத்து விதிமுறை கட்டுப்பாடுகளுக்கும் ஈரான் ஒப்புக் கொண்டால் அணுஆயுத ஒப்பந்தத்தில் இணைவதென ஜோ பைடன் தெளிவாக இருக்கிறார். இதனை ஈரானுடனான எங்களது உறவை மேம்படுத்தும் வாய்ப்பாக கருதுவோம்’ எனவும் ப்ளிங்கின் (Blinkin) கூறினார்.
அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.