கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்கும், அமைச்சரவைப் பத்திரம் வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள அமைச்சர் மகிந்த அமரவீர,
“அடுத்த திங்கட்கிழமை கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்கும் அமைச்சரவைப் பத்திரம், சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகள் தவறானவை.
இந்த முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பாக அரசாங்கம் இன்னமும் இறுதியான முடிவை எடுக்கவில்லை.” என்றும் தெரிவித்துள்ளார்.