ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படும் போது, கிழக்கு கொள்கலன் முனைய விவகாரம் தீர்க்கமான ஒரு காரணியாக இருக்கும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
“ஜெனிவா அமர்வுகளில் சிறிலங்காவை ஆதரிக்க சில நாடுகளின் ஆதரவைப் பெறுவது குறித்து விவாதிக்கப்படும் போது, கிழக்கு கொள்கலன் முனையம் ஒரு பிரச்சினையாக மாறும்.
இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு கொள்கலன் முனையத்தை ஒப்படைப்பது இலஞ்சமாக இருக்கும் என்று நான் கூறமாட்டேன்.
ஆனால் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் குறித்து விவாதிக்கும் போது இது ஒரு முக்கிய காரணியாக மாறும்.
அரசு சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்றதாக எமது அரசாங்கம் மீது குற்றம்சாட்டப்பட்டது, ஆனால் இந்த அரசாங்கமே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.