சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா விரைவில் மக்களை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சசிகலா இன்னும் 3, 4 நாட்கள் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளார் என்று கூறப்படுகிறது.
வரும் 30-ஆம் திகதி சசிகலாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றும், அதில் பாதிப்பு இல்லை என்றால் அன்றே அவர் விடுவிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவர் பெப்ரவரி 3-ஆம் திகதியே சென்னை திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இது குறித்து சசிகலாவின் சட்டவாளர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகையில், விரைவில் தமிழக மக்களை சந்திப்பேன் என்று கூறுமாறு தெரிவித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.