சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து தீவிரமான கவலைகளை எழுப்பியுள்ள, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் காட்டமான அறிக்கை தொடர்பாக, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இந்த அறிக்கையில் சிறிலங்கா அரசுக்கு எதிராக மிக தீவிரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த அறிக்கை தொடர்பாக, தாங்கள் கலந்துரையாடல் நடத்தவுள்ளதாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில், பங்கேற்கவுள்ள சிறிலங்கா அரசின் குழுவில் இடம்பெறவுள்ளவர்கள் யார் என்பது தமக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சே இந்த விவகாரத்தைக் கையாளுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.