உலகின் தொல்பொருள் பாரம்பரிய பிரதேசமான வடக்கு செனகலில், 750 வல்லூறுகள் (falcon) இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள வல்லூறுகளை (falcon) காண ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கமாகும்.
மர்மமான முறையில் இங்கு பெருமளவு பறவைகள் உயிரிழந்துள்ள நிலையில், பார்வையாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த பறவைகளின் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
முன்னதாக, தெற்கு செனகலில், பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தலினால் ஒரு இலட்சம் கோழிகள்,கொன்று அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.