வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்பதால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் ஆரம்பமாகவுள்ளது,
எதிர்க்கட்சிகள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் பலவந்தமாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.