கொரோனா தொற்றாளர்கள் மருத்துவமனைக் கண்காணிப்பில் இருக்க வேண்டிய நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள், 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற விதிமுறை மாற்றப்பட்டு, 10 நாட்கள் இருந்தால் போதும் என்று கூறப்பட்டுள்ளது.
எனினும், ஏனைய 4 நாட்களும் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றாளர்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லாவிடின், 10 நாட்களுக்குப் பின்னர் வீடு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடியை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்களின்படி, கொரோனா தொற்றாளர்கள் 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
ஆனால், சுகாதார அதிகாரிகளின் திட்டமிடல் குறைபாடுகளால், 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் சமூகத்தல் கொரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும். மருத்துவர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.