பெப்ரவரி இறுதிக்குள் ஒன்ராரியோவுக்கு 3.5மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் (Christine Elliott) தெரிவித்துள்ளார்.
சமஷ்டி அரசாங்கத்துடன் நடைபெற்ற பேச்சுக்களை அடுத்து இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசிகள் ஒன்ராரியோவை வந்தடைந்தததும், ஏற்கனவே திட்டமிட்டபடி விநியோகப் பணிகள் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இதன்போதும் ‘முன்னுரிமை’ அடிப்படையிலேயே பொதுசுகாதார ஊழியர்கள் தடுப்பூசியை செலுத்துவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.