அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) கொரோனா தடுப்பூசிக்கான அனுமதியை கனடிய சுகாதாரத்துறை பெப்ரவரி நடுப்பகுதியில் வழங்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஒக்டோபர் முதல் இந்த தடுப்பூசியின் ஆய்வறிக்கைகள் அனைத்தையும் பெறப்பட்டு பரிசீலனைகளை மேற்கொண்டு வந்திருந்த கனடிய சுகாதரத்துறையின் ஆய்வுப்பிரிவு தற்போது சாதகமான சமிக்கைஞயை காண்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இறுதிக்கட்ட சில பரிசோதனைகள் இருப்பதால் பெப்ரவரி நடுப்பகுதியிலேயே முழுமையான அனுமதி அத்தடுப்பூசிக்கு கிடைக்கவுள்ளது.





