கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய ஆரம்ப நாட்களில் வுகானில் நோயாளிகளிற்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழுவினர் இன்று விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
சீனாவின் விஞ்ஞானிகளை சந்தித்த பின்னர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் கூபேயின் மாகாண மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
எங்கள் முதலாவது விஜயம் மிகவும் முக்கியமானது என கீச்சகத்தில் பதிவிட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் உறுப்பினர் பீட்டர் டஸ்ஜாக் (Peter Dusjack) கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய ஆரம்பநாட்களில் நோயாளிகளிற்கு சிகிச்சை வழங்கிய மருத்துவமனைக்கு நாங்கள் சென்றுள்ளோம்.
அவ்வேளை பணியாற்றிய மருத்துவர்கள் பணியாளர்களை சந்தித்துள்ளோம்,அவர்களுடைய பணிகள் குறித்து வெளிப்படையான கலந்துரையாடல்களை மேற்கொண்டோம் என்று தெரிவித்துள்ளார்.