முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்,டி பண்டாரநாயக்க உயிரைக் கொடுத்து பாதுகாத்த கொழும்பு துறைமுகத்தை எந்த நாட்டுக்கும் பறி கொடுக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று, முன்னாள் அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.
“நாட்டின் தேசிய சொத்தான கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியா இன்று கொள்கையில் இருந்து விலகி, அமெரிக்காவுடன் ஏகாதிபத்தியவாத போக்கை ஆரம்பித்திருக்கிறது. அதனால் இந்தியாவுக்கு இடமளிக்கக் கூடாது.
துறைமுகம் மற்றும் விமான நிலையங்களினூடாகவே நாட்டின் இறையாண்மை வெளிப்படுத்தப்படுகிறது. இவை எமது நாட்டுக்கு உரியதாகவே இருக்க வேண்டும்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.