ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கும், அவரது அறிக்கைக்கும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிடும் என்று வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
“ஐ.நா மனித உரிமைகள் பேரவையை எதிர்கொள்வதற்கு சாத்தியமான அனைத்தையும் நாங்கள் மேற்கொள்கிறோம்.
சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது ஐந்து நிமிட உரையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான எங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசாங்கம் ஒரு விசாரணை ஆணைக்குழுவையும், பல குழுக்களையும் நியமித்துள்ளது.
மனித உரிமைகள் விசாரணை அறிக்கை இன்னும் 6 மாதங்களுக்குள் கிடைக்கும்
அதற்குள் யாரும் அவசரப்படக் கூடாது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் தாளத்துக்கு ஆட முடியாது.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.





