கனடாவுக்கான புதிய பயணக்கட்டுப்பாடுகளை பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்துள்ளார்.
அந்த வகையில், வெளிச் செல்லும் எந்த நபரும் மீண்டும் நாட்டுக்குள் பிரவேசிக்கும் போது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அடுத்து, வெளியிலிருந்து நாட்டிற்குள் பிரவேசிக்கும் அத்தனை பேரும் அங்கீகரிக்கப்பட்ட விடுதியொன்றில் ஆகக்குறைந்தது மூன்று நாட்கள் அவர்களின் சொந்த செலவிலேயே தங்க வைக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்வாறு தங்க வைக்கின்றபோது 2ஆயிரம் டொலர்கள் வரையில் செலவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கனடாவில் முக்கிய வானூர்தி சேவைகள் தமது பயணங்களை இடைநிறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.