தனது தாயின் சடலத்தை 10 வருடங்களாக வீட்டில் மறைத்து வைத்திருந்த டோக்கியோவில் வசிக்கும் யுமி யோஷினோ (Yumi Yoshino) எனும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
டோக்கியோ மாநகர சபை வீடொன்றில் யுமி யோஷினோ (Yumi Yoshino) வசித்து வந்தார். அவ்வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியில் சடலமொன்று கிடப்பதை சுத்திகரிப்பு ஊழியர் கடந்த புதன்கிழமை கண்டதையடுத்து இவ்விடயம் அம்பலமாகியது.
டோக்கியோவுக்கு அருகிலுள்ள சிபா நகரில் விடுதியொன்றில் வைத்து யுமி யோஷினோ வை (Yumi Yoshino) இதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் கைது செய்தனர்.