தேசத் தந்தை மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் அஞ்சலி செலுத்தினர்.
அத்தோடு காந்தி நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, மலர்தூவி அஞ்சலி செலுத்தியதோடு, வலம்வந்து மரியாதை செலுத்தினார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோரும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை நாடாளவிய ரீதியில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளும், உதவித்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.