தியாகி முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைகூரல் இரு நிகழ்வுகளாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தது
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழில் உள்ள அலுவலகத்தில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, அவருடைய திருவுருவப்ப படத்திற்கு மலர் மாலை அணிவித்து சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.
அதன் பின்னர், முத்துக்குமாரின் இலட்சியம் அதனை அடைவதற்கான வழிகள் நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் வலியுத்தினார்.
இதேவேளை, தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ். தமிழாராய்ச்சி படுகொலை நினைவுத் தூபி வளாகத்தில் நினைகூரல் நடைபெற்றது.
தமிழகத்தைச் சேர்ந்த முத்துக்குமார் சென்னையில் வைத்து கடந்த 2009ஆம் ஆண்டு, சிறிலங்காவில் தமிழினப் படுகொலையை நிறுத்த வலியுறுத்தியும், இனப் படுகொலைக்கு வல்லாதிக்க இந்திய அரசு துணைபுரிவதைக் கண்டித்தும் தன்னைத் தானே தீயிட்டுக்கொண்டு உயிர் நீத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது காவல்துறையின் காண்காணிப்புக்களும் கெடுபிடிகளும் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.