ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை சஞ்சிகையின் ஆசிரியருமான, டொமினிக் ஜீவாவின் இறுதிக் கிரியைகள் கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளன.
மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா கடந்த 28ஆம் திகதி தனது 93 ஆவது வயதில் கொழும்பில் காலமானார்.
இதையடுத்து அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, கொரோனா தொற்று இருந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்,, டொமினிக் ஜீவாவின் உடல் நேற்று மாலை பொறளையில், சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.