இலங்கை துறைமுக அதிகார சபையின் அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பிரகடனப்படுத்தியுள்ளார்.
அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக ஜனாதிபதி துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின் கையெழுத்துடன் இந்த வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் அரசாங்கம் இந்தியாவுக்கு பங்குகளை வழங்ககூடாது என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி போராட்டங்களுக்கு தயாராகி வரும் நிலையிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.