ஒட்டோவாவில், கனடாவிற்குள் பிரவேசிப்பவர்களை மூன்று நாட்கள் தனிமைப்படுத்தி வைப்பதற்கான விடுதிகள் தயார் செய்யப்பட்ட வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவிற்குள் பிரவேசிப்பவர்கள் எதிர்வரும் நாட்களில் முதல் மூன்று நாட்கள் விடுதிகளிலும் ஏனைய பதினொரு நாட்கள் அவர்களின் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரதமர் ரூடோ அறிவித்திருந்தார்.
பயணக்கட்டப்பாடுகளை விதிக்கும் ஒரு உத்தியாகவே இத்தகைய புதிய விதிமுறை பிரதமரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது முதல் மூன்று நாட்கள் தங்குவதற்கான விடுதிகள் தயாராக்கப்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளின் வாடகைத்தொகை உள்ளிட்ட விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.