கனடாவிற்கு சுதேச சமூகத்திலிருந்து முதலாவது தடவையாக ஆளுநர் ஜெனரல் ஒருவர் தெரிவு செய்யும் வாய்ப்பு எட்டியுள்ளதாக கனடியன் பிரஸ் (canadian press) தெரிவித்துள்ளது.
கனடியன் பிரஸுக்கு வழங்கிய செவ்வியின்போது, சுதேச சமூகத்தினைச் சேர்ந்த பெர்ரி பெல்லிகார்ட் (Perry Bellicard) அதற்கான சமிக்ஞையைக் காண்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விசேடமாக, அவர் பிரென்ஞ்ச் மொழியைக் கற்று வருவதாக அவர் அப்பதவியை வகிப்பதற்கு தயாராகும் நிலைமையை வெளிப்படுத்தியதாகவும் கனடியன் பிரஸ் (canadian pres) தெரிவித்துள்ளது.
இதுபற்றி நேரடியாகவே கேள்வி எழுப்பியபோது புன்னகையையே பதிலாக வழங்கியதாகவும் கனடியன் பிரஸ் (canadian press) மேலும் தெரிவித்துள்ளது.