கனடிய மாகாணங்கள் முடக்கல் நிலைமைகளை தளர்த்துவது தொடர்பில் விடுத்துள்ள அறிவிப்புக்களை அடுத்து பொதுசுகாதாரத்துறையின் தலைமை வைத்திய அதிகாரி வைத்தியர் தெரேசா டாம் (THERESHA TAM) அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
மாகாணமொன்றின் முதல்வர் தனது மாகாணத்தின் யதார்த்த நிலைமையை உணர்ந்து கொள்ளாது அறிவிப்பை விடுத்திருந்தாலும் அம்முடிவை மீள்பரிசோதனைக்கு உட்படுத்தி தீர்மானம் எடுப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்று பொதுப்படையில் குறைந்து வருகின்ற போதும், இன்னமும் சாதகமான நிலைமைகள் முழுமையாக உருவாகிவிட வில்லை என்றும் அவர் எச்சரித்தார்.
கொரோனாவுக்கான தடுப்பூசி விநியோகம் முறையாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது அமுலில் உள்ள பாதுகாப்பு வதிமுறைகளை மேலும் முன்னெடுப்பதன் ஊடாக விரைவில் வழமைக்கு திரும்பி விட முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.