எதிர்வரும் 4ஆம் திகதி சிறிலங்காவின் சுதந்திரதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் அந்த நாளில் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
எதிர்வரும் சுதந்திர தினத்தை கரிநாளாகவே நாம் கடைப்பிடிக்கவுள்ளோம். அன்றையதினம் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டங்கள் திருகோணமலை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
அந்தவகையில் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை நாம் முன்னெடுக்கவுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.