பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக எதிர்வரும் ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தாம் மௌனமாக இருப்பதாக நினைத்துவிட வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அட்டனில் இன்று நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்தப்போவதாக அறிவித்துவிட்டே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.ஆனால், மொட்டுக் கட்சிக்கு வாக்களித்த மக்களே இன்று அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்ச்சிக்கின்றனர்.
பொருட்களின் விலை நாளாந்தம் உயர்வடைந்து வருகின்றது. சிலவேளை நாமும் அந்தப்பக்கம் சென்றிருந்தால் இந்நேரம் மக்களின் சாபத்துக்கு உள்ளாக வேண்டி இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.