மிசிசாகாவில் உள்ள கனடிய தபால்துறை பிரிவில் இதுவரையில் 273 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் நடைபெற்று வரும் தொடர்ச்சியான கொரோனா தொற்று பரிசோதனைகளின் போதே இந்த எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் அடையளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அதேவேளை ஏனைய ஊழியர்களுக்கும் கொரோனா தொற்றுப் பரிசோதனைகளை முன்னெடுக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, தற்போது தபால்துறையின் பகுதியொன்று முழுமையாக மூடப்பட்டள்ளமையும் குறிப்பிடத்தக்கது.