தனது குடிமக்களாக மாறுவதற்கான புதிய விசாவிற்கு ஹொங்கொங் குடியிருப்பாளர்கள் விண்ணப்பிக்கும் வாய்ப்பினை பிரித்தானியா வழங்கியுள்ளது.
இன்று முதல் பிரித்தானிய தேசிய வெளிநாட்டு கடவுச்சீட்டை செல்லுபடியாகும் பயண ஆவணமாக அங்கீகரிக்க மாட்டோம் என்று சீனாவும் ஹொங்கொங்கும் கூறியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், வரலாறு மற்றும் ஹொங்கொங் மக்களுடனான நட்பின் ஆழமான உறவுகளை நாங்கள் கெளரவித்துள்ளோம், சுதந்திரம் மற்றும் சுயாட்சிக்கு நாங்கள் துணை நிற்போம் என்று கூறியுள்ளார்.
பிரித்தானிய தேசிய வெளிநாட்டு கடவுச்சீட்டு என்பது 1987 ஆம் ஆண்டில் அந்நாட்டு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு அந்தஸ்தாகும்.