ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சிறிலங்கா அரசாங்கம் களைவதற்கு, முயற்சிக்க வேண்டியது அவசியம் என்று சிரேஷ்ட விரிவுரையாளரும், சட்டத்தரணியுமான கலாநிதி. பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.
போர் நிறைவின் பின்னரான படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க செயற்பாடுகள் முதல் ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக நீதிபதி தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழு வரையிலான உள்ளக செயற்பாடுகளை சர்வதேசத்திற்கு குறிப்பிட்டுக் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நகர்வினைச் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலான புதிய பிரேரணையொன்று அவசியமா உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தப் பிரேரணைக்கான ஆதரவை காஷ்மீர் விடயத்தில் நெருக்கடிக்குள் உள்ளாகியிருக்கும் இந்தியாவை மையப்படுத்தி கோர முடியும் என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார்.