கனடாவிற்கான கொரோனா தடுப்பூசிகளின் இரண்டாவது கட்ட விநியோகம் எப்போது ஆரம்பிக்கும் என்று மனித உரிமைகள் ஆர்வலர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
சமூக ஊடங்கள் வாயிலாக மத்திய மற்றும் மாகாண அரசுகளை நோக்கி இந்த கேள்விகள் எழுப்ப பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை:, இரண்டாவது மருந்தளவைப் பெற்றுக்கொள்வதற்கான தாமதம் நீடிப்பதாக முதலாவது மருந்தளவைப் பெற்றவர்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.
இவ்வாறு தாமதம் தொடர்கின்றமையால் தமக்கு தடுப்பூசியைப் பெற்றதால் பயனில்iலாது போகும் அபாயம் இருப்பதாகவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
எனினும், இந்த விடயம் சம்பந்தமாக சுகாதாரத்துறையின் உரிய தெளிவுபடுத்தல்கள் அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.