கொ ரோனா தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை ஆகிய மூன்று விஷயங்களில் சுகாதாரத் துறை கவனம் செலுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முன்னதாக கொரோனாவுக்கு எதிராக இந்தியா மட்டுமே இரண்டு தடுப்பூசிகளை மிக விரைவாகக் கொண்டுவந்துள்ளது எனக் கூறிய அவர் பொதுமுடக்கத்தை அமுல்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனா தொற்றால் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





