கனடாவினுள் பிரவேசிப்பவர்கள் மூன்று நாட்கள் விடுதியில் தங்குவதற்கு 2ஆயிரம் டொலர்கள் கட்டணமாக அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் (Bill Blair) இந்த அறிவிப்பினை உத்தியோக பூர்வமாக விடுத்துள்ளார்.
கனடாவிலிருந்து வெளியேறுபவர்கள் மற்றும் பிரவேசிப்பவர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும் முகமாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ அண்மையில் புதிய விதிகளை அறிவித்தார்.
இதனடிப்படையில் கனடாவில் பிரவேசிக்கும் எவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் அவசியமானது என்பதோடு முதல் மூன்று நாட்கள் விடுதியில் தங்க வேண்டும் என்றும் அதற்கான கட்டணத்தினை அவர்களே செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்காக கனடாவின் பல விடுதிகள் தயாராக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது உத்தியோக பூர்வமான கட்டண அறிவிப்பு வெளியாகியுள்ளது.